தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 29,594 ஆண்கள், 18,407 பெண்கள், 18 திருங்கைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கடந்த 2 வாரங்களாக ஆயிரத்தை தொட்ட நிலையில் இன்றைய பாதிப்பு 919ஆக குறைந்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1.438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக செங்கல்பட்டில் 88, காஞ்சிபுரம் 47, மதுரை 20, திருவண்ணாமலை 65, ராணிப்பேட்டை 60, நாகையில் 43 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.