Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்.. அதிர்ச்சி தரும் மாவட்ட வாரியாக பாதிப்பின் முழு விவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 
 

coronavirus...Full details of the districtwise reports
Author
Chennai, First Published Jul 25, 2020, 7:01 PM IST

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்;- தமிழகத்தில் இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,164 பேர் ஆண்கள், 2,824 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,25,553 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 81,161ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

coronavirus...Full details of the districtwise reports

இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51,055 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 89 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,409 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது. 

coronavirus...Full details of the districtwise reports

மாவட்ட வாரியாக பாதிப்பின் முழு விவரம்;-

1.சென்னை-93,537 
2. கோவை -3,237
3.திண்டுக்கல்- 2,115
4.திருநெல்வேலி -3,595 
5.ஈரோடு -586
6.திருச்சி -3,289 
7.நாமக்கல்- 510
8.ராணிப்பேட்டை- 3,467
9.செங்கல்பட்டு- 11,764 
10.மதுரை- 9,595
11.கரூர்- 352
12.தேனி- 3,556
13.திருவள்ளூர்- 11,395 
14.தூத்துக்குடி- 5,291
15.விழுப்புரம்- 2,923 
16.கிருஷ்ணகிரி- 664
17.திருவண்ணாமலை- 4,933 
18.தருமபுரி- 570
19.திருப்பூர்- 668,
20.கடலூர்- 2,250
21.சேலம்-2,845
22.திருவாரூர்- 1,256
23.நாகப்பட்டினம்- 533
24.திருப்பத்தூர்- 864
25.குமரி- 3,393
26.காஞ்சிபுரம்- 6,796 
27. சிவகங்கை- 1,991 
28.வேலூர்- 4,854
29. நீலகிரி- 4,854
30.தென்காசி- 1,607 
31.கள்ளக்குறிச்சி- 2,938
32.தஞ்சை- 1,892
33.விருதுநகர்-  5,573
34.ராமநாதபுரம்-  2,951 
35.அரியலூர்- 800
36.பெரம்பலூர்- 296
37. புதுக்கோட்டை- 1,504 

Follow Us:
Download App:
  • android
  • ios