Asianet News TamilAsianet News Tamil

இனிமே தான் கொரோனா ஆட்டத்தை பார்க்க போறீங்க.. இனி லட்சத்தை பாப்பீங்க.. அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு தகவல்..!

சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என்றும், தொற்று தவிர்ப்பு செயல்பாடுகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே கொரோனாவின் 2-வது எழுச்சி முடிவுக்கு வரும் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

coronavirus...Chennai reaches peak in October...shock report
Author
Chennai, First Published Jun 24, 2020, 11:58 AM IST

சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என்றும், தொற்று தவிர்ப்பு செயல்பாடுகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே கொரோனாவின் 2-வது எழுச்சி முடிவுக்கு வரும் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் ஆரம்பத்தில் கொரோனா அடக்கி வாசித்து வந்த நிலையில் தற்போது ருத்ததாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 

coronavirus...Chennai reaches peak in October...shock report

இந்நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி  இருக்கும்?, எத்தனை பேருக்கு தொற்று பரவும்? என்பது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என்றும், தொற்று தவிர்ப்பு செயல்பாடுகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே கொரோனாவின் 2-வது எழுச்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிய வந்துள்ளது.

coronavirus...Chennai reaches peak in October...shock report

தற்போது சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு, கொரோனா உச்ச நிலையை அடையும் வேகத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு குறைக்கலாம். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் வேறு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். 

coronavirus...Chennai reaches peak in October...shock report

அதன்படி, அடுத்த ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும், இதில் 60 சதவீத தொற்று சென்னையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை மாத மத்தியில் சென்னையில் 1,654 இறப்புகளும், தமிழகம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 3,072 ஆக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் கொரோனா தொற்று உச்ச நிலையை அடைந்ததும் சில வாரங்களில் படிப்படியாக இறங்கும் என கூறியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios