பல்வேறு வதந்திகளுக்கு இடையே சென்னை தி.நகரில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் போத்திராஜ் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

போத்தீஸ் ஜவுளி நிறுவனம் , தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ள துணிக்கடையாகும். முதலில் அவர்கள் பட்டுப் புடவைகளை பிரத்தியேகமாக விற்றனர், ஆனால், இன்று துணிகள் மட்டுமன்றி அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் விற்கப்படுகின்றன. போத்தீஸ் நிறுவனத்தின் கிளைகள் தனது சேவையை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய முக்கிய நகரங்களில் அமைத்துள்ளது. அதுமட்டும் அல்லாது பிற மாநிலங்களான கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், பெங்களூருவிலும் அமைந்துள்ளது. 

இந்நிலையில், அண்மையில் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து தி.நகரில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது, கடைக்கு வந்த வாடிக்கையாளர் மற்றும் அவரது ஓட்டுநர் மூலமாக உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் கூட போத்தீஸ் உரிமையாளர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர் போத்திராஜ் மீண்டு வீடு திரும்பியுள்ளார்.