தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 80 பேர் ஆண்கள், 41 பெண்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று மட்டும் 27குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்தம் ணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1128ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக புதியதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஆக இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 121 உயர்ந்துள்ளதால் சமூக பரவல் அச்சத்தில் தமிழக அரசு இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த தொற்று ஏற்பட்டது என்ற சங்கிலி தொடரை கண்டுபிடிக்க  முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.