Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும்.. பகீர் தவலை வெளியிட்ட மாநகராட்சி ஆணையர்..!

அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டால் நேரடியாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கவும், சிறு அறிகுறி இருந்தால் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

corona will peak in Chennai in May... chennai corporation commissioner
Author
Chennai, First Published Apr 23, 2021, 12:01 PM IST

அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டால் நேரடியாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கவும், சிறு அறிகுறி இருந்தால் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கொரோனா பரிசோதனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். லேசான அறிகுறி உள்ளவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. 

corona will peak in Chennai in May... chennai corporation commissioner

குறைவான அறிகுறி உள்ளவர்களும் மருத்துவமனை வருவதால் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தொற்றின் தீவிரத்தன்மையை பொறுத்து நோயாளிகள் மருத்துவமனைக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். தீவிர பாதிப்பு உள்ளவர்களை மாநகராட்சி வாகனத்திலேயே மருத்துவமனை அழைத்து செல்லப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அரசு பரிந்துரைத்த சத்தான உணவுகள் வழங்கப்படும், மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

corona will peak in Chennai in May... chennai corporation commissioner

 தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா வார்டுகளுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளோம். சென்னையில் மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர் என  மாநகராட்சி ஆணையர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios