கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது உருமாற்றம் அடைந்திருப்பதாக கூறும் மருத்துவர்கள் தொற்றில் இருந்து குணமடைவோருக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதாக எச்சரிக்கின்றனர். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பாதிப்பை விட கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமடைவோர் வேறு பல உடல் உபாதைகளை சந்திப்பது அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ரத்த உறைதல், சிறுநீர பிரச்சனை, இதயம் சார்ந்த பிரச்சனைகளுடன் மருத்துவமனையை அணுகுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக இளம் வயதினருக்கு மூளை அயர்ச்சி நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அடுத்த ஓராண்டுக்கு தங்கள் உடலில் நிகழும் சிறு சிறு மாற்றங்களை கூட உன்னிப்பாக கவனித்து மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர். வைரஸ் உருமாற்றம் அடைந்ததே இதற்கு காரணம் என்றால் இல்லை என கூறும் ஆய்வாளர்கள் வைரஸ் உருமாற்றம் அடைவது இயல்பு தான் என கூறுகின்றனர். 

தற்போது இனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்காக போஸ்ட் கொரோனா வார்டை ஏற்படுத்தி அவர்கள் உடல்நிலையை தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.