தமிழ்நாட்டில் இன்று மேலும் 3756 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக, ஓரளவிற்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று 35979 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 3756 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவது நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1261 பேருக்கு மட்டுமே சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 72500ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது மட்டுமே ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3051 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 74167ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 64 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1700ஆக அதிகரித்துள்ளது.