Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் 2 காவலர்களுக்கு கொரோனா... பரபரப்பாக இருக்கும் முக்கிய காவல் நிலையத்துக்கு பூட்டு..!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

corona positive for 2 police...nungambakkam police station lock
Author
Chennai, First Published Apr 28, 2020, 12:38 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது.  இதுவரை சென்னையில் மட்டும் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வாணியம்பாடி, கோவை உள்ளிட்ட ஒரு சில காவல் நிலையங்கள் மூடப்பட்டது. 

corona positive for 2 police...nungambakkam police station lock

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலருக்கு சளி மற்றும் தொண்டை வலி இருந்ததையடுத்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல, நுங்கம்பாக்கம் உளவுத்துறை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

corona positive for 2 police...nungambakkam police station lock

இதனால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் காவல்நிலையத்தை பூட்டி கிருமி நாசினி தெளிக்க உள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உதவி ஆணையர் அலுவலகம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. அங்கு பணிபுரியும் அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை எடுத்து வருகின்றனர். கொரோனா பாதிப்பால் சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios