இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்தது. 

கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக சுகாராத துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர்களை தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் தற்போது, தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை, 1596 ஆக உயர்ந்துள்ளது. 

நாளுக்கு நாள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், கரூர், சென்னை, ஈரோடு, போன்ற பல்வேறு மாவட்டங்களில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடைத்து வீடுதிரும்பி வருகிறார்கள் என்பது ஒரு ஆறுதல்.