Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா.. 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

Corona increase in 6 states including Tamil Nadu...central government Warning
Author
Chennai, First Published Feb 28, 2021, 3:47 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களை விட தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 11,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Corona increase in 6 states including Tamil Nadu...central government Warning

அதாவது இந்த 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37 சதவீதம் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா பரவக்கூடிய பகுதிகளை கண்காணிக்காவும், கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

Corona increase in 6 states including Tamil Nadu...central government Warning

மேலும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், விரிவான கண்காணிப்பு செய்யவும், வைரஸ் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தவும், நெருங்கிய தொடர்புகளையும் விரைவாக தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios