Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் மீண்டும் செம காட்டு காட்டும் கொரோனா... அச்சத்தில் பொதுமக்கள்..!

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Corona increase again in Chennai
Author
Chennai, First Published Sep 29, 2020, 4:05 PM IST

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு என்ற நிலையை அடையவில்லை. அதேபோல சென்னையிலும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி தொற்று ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 1,280, நேற்று 1,283 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Corona increase again in Chennai

மேலும் சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒரே நிலையே நீடிக்கிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நேற்று மட்டும் 80,465 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,589 பேருக்கு தொற்று உறுதியானது.  இதில் சென்னையில் 1,283 பேர், செங்கல்பட்டில் 249 பேர், திருவள்ளூரில் 249 பேர், காஞ்சிபுரத்தில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Corona increase again in Chennai

தமிழக அளவிலான பாதிப்பு தற்போது 5 லட்சத்து 86,397 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து 53 ,858 ஆண்கள், 2 லட்சத்து 32,508 பேர் பெண்கள், 31 திருநங்கைகள் அடங்குவர். நேற்று 5,554 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த குணமடைந்ேதார் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் ஆக உயர்ந்துள்ளது. 46,306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios