Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா... பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா?

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

Corona for teachers and students next ... Will schools close again?
Author
Tamil Nadu, First Published Sep 4, 2021, 4:46 PM IST

தமிழகத்தில் அடுத்தடுத்து ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து மீண்டும் பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளி வளாகங்களிலும் முழுமையான சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Corona for teachers and students next ... Will schools close again?

இந்நிலையில், நெய்வேலி என்.எல்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் 2 பெண் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த ஆசிரியர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Corona for teachers and students next ... Will schools close again?

முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கும், அரியலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios