Asianet News TamilAsianet News Tamil

#BREAKING சென்னையில் பயங்கர அதிர்ச்சி... ஆதரவற்ற இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா..!

சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona for 74 children in an orphanage in chennai
Author
Chennai, First Published May 18, 2021, 1:05 PM IST

சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை சுனாமி வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10,000 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Corona for 74 children in an orphanage in chennai

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகள் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகள் 175 பேரில் 74 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் சம்பந்தபட்ட பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆசிரியர் ஒருவர் மூலமாக குழந்தைகளுக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Corona for 74 children in an orphanage in chennai

இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் அந்த பகுதியை பார்வையிட்டு சென்றுள்ளனர். இவர்கள் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இடவசதி உள்ளதா? அளிக்கப்படும் சிகிச்சை விவரம் தெரியவில்லை. உள்ளே யாரையும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவத் துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios