Asianet News TamilAsianet News Tamil

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. கொரோனா 3வது அலை குறைய தொடங்கிடுச்சாம்.. இந்த 30 மாவட்டங்களில் ரொம்ப மோசம்.!

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பதிவான நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. மணலி, அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. 

Corona declining in Chennai.. Health Secretary Radhakrishnan
Author
Chennai, First Published Jan 23, 2022, 1:26 PM IST

 கோவை, குமரி, தஞ்சை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வெளியில் செல்பவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Corona declining in Chennai.. Health Secretary Radhakrishnan

இந்நிலையில், சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பதிவான நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. மணலி, அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. கடந்த 15-ம் தேதி 30% ஆக இருந்த பாதிப்பு தற்போது 20% ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் குறைந்துள்ளது.

Corona declining in Chennai.. Health Secretary Radhakrishnan

இணை நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கோவை, குமரி, தஞ்சை நாகப்பட்டினம் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தயவு செய்து கொரோனா தடுப்பூசிகளையும், பூஸ்டர் டோஸ் தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும். டிசம்பரில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 100 பேரில் ஒருவர் உயிரிக்கின்றனர் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios