Asianet News TamilAsianet News Tamil

ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கப்படும் கொரோனா மரணங்கள்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு தகவல் வந்தாலும், அதனை சேர்த்து தினசரி கொரோனா உயிரிழப்புகளின் கணக்கில் காட்டப்படுவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை.

Corona deaths are not hidden...health secretary radhakrishnan
Author
Chennai, First Published Jun 8, 2021, 6:59 PM IST

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. 2வது அலையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவிற்கு 493 பேர் வரை உயிரிழந்ததாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 500ஐ தாண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால்  மே மாத மத்தியில் சுடுகாடுகளில் நீண்ட நேரம் காத்திருந்து கொரோனாவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்கும் நிலை இருந்தது. இந்த நிலை சுமார் ஒரு வாரம் நீடித்தது. 

Corona deaths are not hidden...health secretary radhakrishnan

ஆனால் அப்போது தெரிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் எரிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கையும் டேலி ஆகவில்லை என்கிற புகார் எழுந்தது. மேலும், மே மாதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கப்பட்டு அந்த எண்ணிக்கை தற்போது ஜூன் மாத இறப்பு எண்ணிக்கையோடு சேர்த்து வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது. 

Corona deaths are not hidden...health secretary radhakrishnan

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு தகவல் வந்தாலும், அதனை சேர்த்து தினசரி கொரோனா உயிரிழப்புகளின் கணக்கில் காட்டப்படுவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருவதாகவும், சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்க தாமதம் ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios