தமிழ்நாட்டில் இன்று மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,460ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், இன்று 61166 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5175 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,460ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று 1044 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,05,004ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 6031 பேர் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,14,815ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. 

இன்று 112 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 4461ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு சுமார் 7 ஆயிரம் என்கிற அளவில் உறுதியாகி கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்துவந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்த 5175ஆக குறைந்துள்ளது. அதுவும் 61166 பரிசோதனைகள் செய்தும் 5175 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது.