தமிழ்நாட்டில் இன்று மேலும் 5609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 65 ஆயிரம் என்கிற அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. 

இன்று 58211 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5609 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று 1021 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,02,985ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 5800 பேர் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,02,283ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. 

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 109 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 4241ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றுதான் முதல் முறையாக 100க்கும் அதிகமானோர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.