தமிழ்நாட்டில் இன்று மேலும் 5967 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3,85,352ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தும் வகையில், அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில், தினமும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இன்று 5967 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,85,352ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று மேலும் 1278 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,677ஆக அதிகரித்துள்ளது. இ-பாஸ் தளர்வால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னையை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அந்தவகையில், கடந்த ஒரு வாரத்தில் மற்ற ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்த 79,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று 6129 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,25,456ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 6614ஆக அதிகரித்துள்ளது.