தமிழ்நாட்டில் இன்று மேலும் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தும் வகையில், அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில், இன்று 67532 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், மேலும் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 343945ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று மேலும் 1185 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரத்துக்கும் கீழாக குறைந்த பாதிப்பு கடந்த சில தினங்களாக மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,16,632ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 5667 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,83,937ஆக அதிகரித்துள்ளது. இன்று 120 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5886ஆக அதிகரித்துள்ளது.