தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,055ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், இன்று 70450 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5950 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,055ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று மேலும் 1166 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,16,610ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு கட்டுக்குள் வர தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை செய்யப்படும் போதிலும், பாதிப்பு குறைந்துள்ளது. இது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்தும் நிலையில், அதிகமானோர் குணமடைந்தும் வருவது இன்னொரு நல்ல செய்தி. இன்று ஒரே நாளில் 6019 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,78,270ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 125 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5766ஆக அதிகரித்துள்ளது.