தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் நேற்றுவரை 309ஆக இருந்தது கொரோனா பாதிப்பு. அந்த 309 பேரில்ம் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்ற தகவலை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தினார்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 1103 பேரை கண்டறிந்து சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை எகிறியது. தமிழகத்தில் கொரோனாவால் 309 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 102 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது. 

ஆனால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள 102 பேரின் பின்னணி தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் உக்கிரமாக இருக்கும் மகாராஷ்டிராவை நெருங்கிவிட்டது தமிழ்நாடு. 
 

கொரோனா சமூக தொற்றாக பரவவில்லை என்று கூறப்பட்டுவரும் அதேவேளையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 102 பேரின் பின்னணி தெரிந்தால்தான் தெளிவு கிடைக்கும்.