இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் 3 நாட்களில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 364 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பில் ஆரம்பம் முதலே முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 420ஐ கடந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிராவை நெருங்கிவிட்டது தமிழ்நாடு. விரைவில் மகாராஷ்டிராவை முந்தி முதலிடத்தை பிடிக்கும் அபாயத்தில் உள்ளது தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. 7 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.ம் சென்னையில் மட்டும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை - 81

திண்டுக்கல் - 43

நெல்லை - 36

ஈரோடு - 32

கோவை - 29

தேனி, நாமக்கல் - 21

கரூர் - 20

செங்கல்பட்டு - 18

மதுரை - 15

விழுப்புரம் - 13

திருவாரூர் - 12

விருதுநகர் - 11

திருப்பத்தூர் - 10

தூத்துக்குடி - 9

சேலம் - 8 

ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகப்பட்டினம் - 5

காஞ்சிபுரம் - 4

திருவண்ணாமலை, ராமநாதபுரம் - 2

திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருப்பூர் - 1