கொரோனா பாதிப்பிலிருந்து மீள மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத்தில் கலந்துகொண்டவர்களில் பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் பதற்றமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 

தப்ளீக் ஜமாத்தில் வெளிநாட்டினரும் கலந்துகொண்டதால் அவர்களிடமிருந்து இந்தியர்களுக்கு பரவியிருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து முஸ்லீம்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களை பரிசோதித்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. 

அந்தவகையில், அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 1103 பேரை கண்டறிந்துள்ள தமிழக சுகாதாரத்துறை, அவர்களில் 658 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் இன்றைய தினம் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் 124ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. இந்த 234 பேரில் 190 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து மகாராஷ்டிரா(320), கேரளா(241) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாவட்டவாரியாக பார்ப்போம். 

நெல்லை - 29

கோவை - 29

சென்னை - 26

ஈரோடு - 26

தேனி - 20

நாமக்கல் - 18

திண்டுக்கல் - 17

மதுரை - 15

செங்கல்பட்டு - 11

திருப்பத்தூர் - 7

சேலம் - 6

கன்னியாகுமரி - 5

சிவகங்கை - 5

விழுப்புரம், தூத்துக்குடி, காஞ்சிபுரம் - 3

கரூர், திருவாரூர் , திருவண்ணாமலை - 2

தஞ்சை, ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர், வேலூர் - 1.