சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஆயிரத்துக்கும் கீழே சென்னையில் கொரோனா தொற்று பதிவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுகள் சென்னையில் பதிவாகி வருகின்றன.கடந்த வாரம் வரை சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லாமல் இருந்தன.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சென்னையில் ஆலந்தூர் மண்டலத்தில் 4, கோடம்பாக்கம் மண்டலத்தில் 3, சோழிங்கநல்லூர் மண்டலத்தில்  2 மண்டலம், வளசரவாக்கம் மண்டலத்தில் 1 என சென்னையில் 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் 5-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

 
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்வுகள் எதுவும் பொருந்தாது. வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.