தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167ஆக அதிகரித்துள்ளது. ஜெர்மனி, பஹ்ரைன் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 76 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று அதிகபடச்சமாக  2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 2வது நாளாக பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது.  தமிழகத்தில் இன்று மேலும் 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 50,074ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக 60 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் 1,201ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 888 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11,70, 441 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.