Asianet News TamilAsianet News Tamil

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்... கொரோனா பாதிப்பைச் சொல்லும் வண்ணங்கள்.. 17 தமிழக மாவட்டங்கள் சிவப்பு பட்டியலில்!

சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவடங்கள் சிவப்பு வண்ணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் எனக் குறிக்கும் வகையில் சிவப்பில் இடம்பெற்றுள்ளன.

Corona affected area mentioed in three colours
Author
Chennai, First Published Apr 11, 2020, 9:08 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸால் 17 மாவட்டங்கள் அதிகம் பாதிகப்பட்டுள்ளன.

Corona affected area mentioed in three colours
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 58 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மூன்று வண்ணங்களில் பிரித்துள்ளது தமிழக அரசு.Corona affected area mentioed in three colours

இதுவரை மாவட்ட வாரியாகப் பாதிப்பு எண்ணிக்கை சாதாரணமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மூன்று வண்ணங்களாகக் குறிப்பிட்டு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய நிறங்கள் வைரஸில் தாக்கத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவடங்கள் சிவப்பு வண்ணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் எனக் குறிக்கும் வகையில் சிவப்பில் இடம்பெற்றுள்ளன.Corona affected area mentioed in three colours
திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது பாதிப்பு மிதமாக உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி, காஞ்சி, சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் மஞ்சள் நிறத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது இந்த மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios