சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில். இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உட்பட 7 பேரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், ஓமந்தூரார் அரசு கொரோனோவால் பாதித்த 4 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

இதனையடுத்து, சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  404ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.