கொரோனா பாதிப்பு... கோட்டூர்புரம் தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுப்பிரிவு தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

corona affect...kotturpuram SI Death

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுப்பிரிவு தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,652 ஆக உள்ளது. சென்னையின் நேற்றைய தொற்று 3,719 ஆக உயர்ந்துள்ளது.

corona affect...kotturpuram SI Death

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த காவலர் கருணாநிதி  கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 13ம் தேதி காய்ச்சல் காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மறுநாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனா வார்டில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஏப்ரல் 21ம் தேதியன்று பகல் நுங்கம்பாக்கம் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

corona affect...kotturpuram SI Death

இந்நிலையில், இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக கருணாநிதி உயிரிழந்தார். 1997-ம் ஆண்டு பணியில் இணைந்த அவர், ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அவருக்குத் திருமணமாகி சுந்தரவள்ளி (42) என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவரது மரணம் போலீஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இவரது உடல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios