Asianet News TamilAsianet News Tamil

Vandalur Zoo: வண்டலூர் பூங்காவில் அதிர்ச்சி.. பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழப்பு?

சிறுத்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜெயா என்ற 17 வயது சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.  சிறுத்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

corona affect... Female Leopard dead in Vandalur Zoo
Author
Chennai, First Published Jan 18, 2022, 12:02 PM IST

வண்டலூர் பூங்காவில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஜெயா என்ற பெண் சிறுத்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இதில், வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்நிலையில், இங்கு பணிபுரியும் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 76 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா 17ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

corona affect... Female Leopard dead in Vandalur Zoo

இந்நிலையில், தொடர்ந்து சிறுத்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜெயா என்ற 17 வயது சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.  சிறுத்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

corona affect... Female Leopard dead in Vandalur Zoo

ஆனைமலை வனப்பகுதியிலிருந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட ஜெயா என்ற சிறுத்தையை வண்டலூரில் பராமரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயது மதிக்கத்தக்க விஷ்ணு என்கின்ற ஆண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios