சென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..!
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், தலைமை செவிலியர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, கடந்த 26-ம் தேதி முதல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல் தலைமை பெண் செவிலியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.