தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணக்கை 4,74,940-ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,74,940ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 988 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அரசு மருத்துவமனையில் 44 பேர், தனியார் மருத்துவமனையில் 43 பேர் என 87 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,012ஆக உயர்ந்துள்ளது.இன்று 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 4,16,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50,213 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று மட்டும் 83,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 54,62,277 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. புதிதாக இரண்டு தனியார் ஆய்வகத்துக்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் 64 அரசு ஆய்வகங்கள், 99 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 163 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.