கண்டெய்னர் லாரிகள் சென்னைக்குள் வரக்கூடாது! தீபாவளியை முன்னிட்டு தடை உத்தரவு!
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 3 நாட்கள் கண்டெய்னர் லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பிற மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏராளமான மக்கள் பயணிக்க உள்ளனர். சொந்த ஊருக்குச் செல்லும் அவர்களுக்கு வசதியாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டுமின்றி, கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க கண்டெய்னர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால், சாலைகளில் போக்குவத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன" என்றார்.
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? தென் மாவட்டங்களுக்குச் செல்ல புதிய சிறப்பு ரயில் அறிவிப்பு!
நவம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களுக்கு மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கண்டெய்னர் லாரிகளை சென்னைக்குள் இயக்கக்கூடாது என்று தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார். வெளியூர்களில் இருந்து மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக சென்னைக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் சென்னை நோக்கி வரும் கண்டெய்னர் லாரிகளை நகருக்கு வெளியியே தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் நிறுத்துவதற்கு தற்காலிகமான இடங்களை ஏற்பாடு செய்ய காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சென்னையில் புதிய வேகக் கட்டுப்பாடு! நவ. 4 முதல் ஓவர் ஸ்பீடில் போகும் வாகனங்களுக்கு ஆப்புதான்!