சென்னை திருவான்மியூர் பகுதியில் நேற்று இரவு திடீரென கடல் நீல நிறத்தில் மாறி காட்சியளித்தது . இந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது . இதை கேள்விபட்டதும் இளைஞர்கள் , பொதுமக்கள் என நள்ளிரவு நேரத்திலும் திரண்டு வந்தனர் .

கடல் நிறம் மாறியதை ஆச்சரியத்துடன் பார்த்த அவர்கள் , அதை தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுத்து கொண்டனர் . அந்த அலைகளோடு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர் .

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது , உலகின் பல இடங்களில் கடல் நீலம் மற்றும் மஞ்சள் நிறமாக சில நேரங்களில் மாறுவது வழக்கம் தான் . கடலில் இருக்கும் பாக்டீரியாக்களால் இந்த நிறம் மாறும் தன்மை நடைபெறும் என்றும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது  என்று கூறினார் .

திருவான்மியூர் மட்டுமின்றி ஈச்சம்பாக்கம் , பெசன்ட் நகர் பகுதிகளிலும் கடல் நிறம் மாறி காணப்பட்டது . இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வந்துள்ளது ..