சென்னையில் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. செல்போன் பேசியபடி சென்ற கல்லூரி மாணவி மீது விரைவு ரயில் மோதி பலி
சென்னையில் கல்லூரி மாணவிகள் செல்போன் பேசிய படியும், ஹெட்செட்டில் பாட்டு கேட்ட படியும் ரயில் தண்டவாளம் மற்றும் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை பொத்தேரி ரயில் நிலையம் அருகே பல்லவன் விரைவு ரயில் மோதி தனியார் பல்கலைக்கழக மாணவி கிருத்திகா (20) உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் கல்லூரி மாணவிகள் செல்போன் பேசிய படியும், ஹெட்செட்டில் பாட்டு கேட்ட படியும் ரயில் தண்டவாளம் மற்றும் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், பெங்களத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள் நடடைபெற்ற வண்ணம் உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் B.optom 3ம் ஆண்டு படித்து வரும் மாணவி கிருத்திகா(20). இவர் பெருங்களத்தூரை சேர்ந்தவர். தினமும் கல்லூரிக்கு ரயிலில் வந்து செல்வது வழக்கம். வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார்.
அப்போது பல்லவன் விரைவு ரயில் வந்துக்கொண்டிருந்த போது மாணவி கிருத்திகா மீது மோதியதில். இதில், உடல்சிதறி மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருத்திகாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போன் பேசிய படி தண்டவாளத்தை கடந்து சென்ற போது விரைவு ரயில் மோதியது தெரியவந்தது.