தஞ்சாவூரை சேர்ந்த மாணவி பவித்ரா(19). சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி-பார்ம் படித்து வந்தார். இதனால் பல்லாவரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பவித்ரா விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் தனியார் விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி அறையில் தற்கொலை

தஞ்சாவூரை சேர்ந்த மாணவி பவித்ரா(19). சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி-பார்ம் படித்து வந்தார். இதனால் பல்லாவரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பவித்ரா விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கை

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பவித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

வாட்ஸ்அப்பில் பெற்றோருக்கு தகவல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பவித்ரா தற்கொலைக்கு செய்வதற்கு முன்பாக பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலமாக தன்னால் படிக்க முடியவில்லை. நீங்கள் பணம் கட்டி என்னால் மிகவும் கஷ்டபடுவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.