ஏன்டி என் லவ்வர் கூட பேசுற.. தலை முடியை பிடித்து கொண்டு நடுரோட்டில் சண்டையிட்ட சென்னை கல்லூரி மாணவிகள்.!
சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மை கல்லூரி மாணவிகள் சிலர் பேருந்து நிறுத்தத்தின் நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இன்னொரு மாணவி, அவரிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். சுற்றி பொதுமக்கள் பலர் இதை பார்த்துக்கொண்டு இருந்தனர். நேரம் செல்ல செல்ல இருவரும் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி மாறி மாறி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா நகரில் மாணவிகள் தலைமுடியை பிடித்துக் கொண்டு சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் சண்டை
சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மை கல்லூரி மாணவிகள் சிலர் பேருந்து நிறுத்தத்தின் நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இன்னொரு மாணவி, அவரிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். சுற்றி பொதுமக்கள் பலர் இதை பார்த்துக்கொண்டு இருந்தனர். நேரம் செல்ல செல்ல இருவரும் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி மாறி மாறி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ வைரல்
சிறிது நேரத்தில் வாயால் பேசிக்கொண்டிருந்த போதே கை கலப்பாக மாறியது. ஒரு மாணவியின் தலைமுடியை இன்னொரு மாணவி பிடித்து இழுத்து அடித்தார். பதிலுக்கு இந்த மாணவியும் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்து.. தரையில் தள்ளி தாக்கினார். அங்கிருந்த சக மாணவிகள் சிலர் பெரும் பேராட்டத்திற்கு இடையே இருவரையும் தடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
காதல் விவகாரம்
இது தொடர்பாக விசாரித்த போது இரண்டு மாணவிகளும் ஒரே நபரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரு மாணவிகளையும் அழைத்து விளக்க கேட்டுள்ளனர்.