சென்னை அதிர்ச்சி சம்பவம்.. பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி..!
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் மதுரை பாண்டியன் மெஸ் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் திருவான்மியூரை சேர்ந்த பாலா என்பவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மேலாளரிடம் முறையிட்ட போது இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேறு உணவு தருகிறோம் என்று கூறி சமாதானம் செய்ய முயற்சித்தனர். சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. விரைவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சாம்பாரில் புழு இருந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.