Asianet News TamilAsianet News Tamil

விசாரணை ஆரம்ப கட்டத்தின் தான் இருக்கு... பயிற்சியாளர் நாகராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி...!

ஜாமின் வழங்கக் கோரி  நாகராஜன் தாககல் செய்த மனு நீதிபதி டி.எச்.முகமது பரூக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

Coach nagarajan bail petition cancelled by special court
Author
Chennai, First Published Jun 11, 2021, 6:54 PM IST

சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றுபவரிடம், தடகள வீராங்கனைகள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர். 

Coach nagarajan bail petition cancelled by special court

நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீராங்கனை ஒருவர் அளித்த புகாரில் பல சமயங்களில்  பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாக கூறி  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.இந்த புகாரில் நாகராஜன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மே 28 ஆம் தேதி நாகராஜனை கைது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கபட்டார். 

Coach nagarajan bail petition cancelled by special court

இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி  நாகராஜன் தாககல் செய்த மனு நீதிபதி டி.எச்.முகமது பரூக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios