விரைவில் கூடுகிறது மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வகைகளில் போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 1ன் மூலம் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டி, 1 மகளிர் பெட்டி என 4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணிகளின் தேவைக்காக கூடுதலாக 2 பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கொயேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்
இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூடுதல் பெட்டிகளை இணைக்க 1.5 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் ஆகலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கவே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -மதுரை தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே