வசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..!

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை கொண்டுவர 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு லஞ்சம் கொடுத்த புகாரையடுத்து முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருந்து பெரும்பாக்கம் குளோபல் தனியார் மருத்துவமனை நீக்கப்பட்டுள்ளது.

CM medical insurance plan...global private hospital Removal

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முதல்வரின் காப்பீடு திட்டம், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்கள், விபத்து மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனை இலவசமாக உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

CM medical insurance plan...global private hospital Removal

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் படுகாயம் அடைபவர்களை அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் பெரும்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குளோபல் மருத்துவமனையில் சேர்த்ததாக புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. 

CM medical insurance plan...global private hospital Removal

இதுதொடர்பான  புகாரை அடுத்து, '108' ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றிய, 10 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில், தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டங்களில் இருந்து, பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை நீக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக சுகாதாரத் துறை நேற்று பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவு காரணமாக, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், மத்திய, மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios