Asianet News TamilAsianet News Tamil

#BREAKING வாட்ஸ்ஆப் மூலம் 12ம் வகுப்பு அலகுத் தேர்வு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

12ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Class 12 Unit Examination .. Publication of Guidelines
Author
Chennai, First Published May 19, 2021, 4:25 PM IST

12ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுக்கடங்னாத வேகத்தில் கொரோனா பரவியதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் உச்சத்தில் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உறுதியாக நடைபெறும் என்றார்.

Class 12 Unit Examination .. Publication of Guidelines

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 

*  வாட்ஸ்ஆப்பில் மாணவியருக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழுக்களை உருவாக்க வேண்டும்.

*  மாணவ மாணவியர்களுக்குத் தனித்தனியாக வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.

*  மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுத வேண்டும்.

*  விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

*  வாட்ஸ் ஆப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்கூடாது.

*  ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios