விமான நிலையங்களில், பயணிகளை சோதனை செய்யும்போது, ஆர்பிஎப் வீரர்கள், அத்துமீறலில் ஈடுபடுவதாக எம்பிக்கள் புகார் கூறுகின்றனர்.

நாட்டில் உள்ள 65 விமான நிலையங்களில், சிஐஎஸ்எப் எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பயணிகளை சோதனை செய்யும்போது, அவர்களது உடலில் கை வைத்து அத்துமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது

பயணிகளின் உடலை தடவி சோதனையிடும்போது, மிக மோசமாக நடந்து கொள்வதாக, 2018 - 19ம் ஆண்டில், 6 எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மக்களவையில் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார்.