ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தை  இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் மீட்போம் என மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறுவன் 20 மணி நேரமாக  உயிருக்குப் போராடு வரும் நிலையில் மீட்பு குழுவினர் இவ்வாறு கூறியுள்ளது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்க ஏற்கனவே தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் இதுவரை  உள்ளூரைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு அதில் பலன் கிடைக்கவில்லை.  இந்நிலையில் தேசிய மற்றம் மாநில மீட்புப் படையினர் சுமார் 53 பேர் தற்போது சிறுவனை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் கொண்டு வந்துள்ள அதிநவீன கேமிராக்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு சிறுவனை மீட்க முயற்ச்சித்து வருகின்றனர். அத்துடன் சிறுவனைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை  இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் உயிருடன் மீட்டு விடுவோம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இது குழந்தையின் மீட்பை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைவருக்கும்  ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் மழைமேகம் சூழ்ந்துள்ளதால் மழை ஏற்பட்டு நீர் குழிக்குள் சென்றுவிடாதவாறு முன்னெச்சரக்கை நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்குள் 2 வயது சிறுவன் சுஜீத் வில்சன் விழுந்தான்.  நேற்று (அக்.,25) மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக்குள் விழுந்த குழந்தையை கேமிரா, மைக், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளுடன் மீட்கும் பணி நடந்து வருகிறது.  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து பேரிடம் மீட்புக் குழுவும் நடுகாட்டுபட்டிக்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், கடைசி முயற்சியாக நவீன கருவிகளை கொண்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

27 அடியில் இருந்து 70 அடி ஆழ்திற்கு சென்று விட்ட குழந்தையின் கைகளில் கயிறு கட்டி எடுக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில்,  மறுபுறம், ஆழ்துளையை சுற்றி 4 புறங்களிலும் பொக்லைன் இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டு வருகிறது. இந் நிலையில் குழந்தையை மீட்க அங்குவந்துள்ள மத்தியக் குழுவினர் சிறுவனை இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் மீட்போம் என்று உறுதி பூண்டுள்ளனர்.