சென்னையில் உல்லாசமாக இருந்து விட்டு கள்ளக்காதலி வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜடாராஜா(23). கொடுங்கையூர் சர் மாநகர் 36வது வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடன் பத்மினி(36) என்பவரும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். பத்மினி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

ஒரே இடத்தில் வேலை செய்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் ஜடா ராஜா பத்மினி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து பத்மினி அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வநத்போது வீட்டில் உள்ள மின்விசிறியில்  ஜடா ராஜா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜடா ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்புரவு பணியாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.