Asianet News TamilAsianet News Tamil

அசால்டாக ஈமெயிலை ஹேக் செய்த சென்னை பையன்! அசந்துபோன நாசா விஞ்ஞானிகள்!

ஈமெயில் அமைப்பை ஹேக் செய்த மகஷ்வரகன், தானே Bugcrowd வசதியின் மூலம் நாசாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அவரது திறமைப் பாராட்டி நாசா கடிதம் அனுப்பியுள்ளது.

Chennai youngster Magashwarahan hacks NASA email system, gets appreciation letter sgb
Author
First Published Oct 6, 2024, 12:43 PM IST | Last Updated Oct 6, 2024, 1:33 PM IST

கல்லூரியில் இளங்கலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (பிசிஏ) படிக்கும் 20 வயது இளைஞர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மின்னஞ்சல் அமைப்பை ஹேக் செய்துள்ளார். இதனை அறிந்த நாசா அந்த இளைஞரின் திறமைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.

"நாசாவின் இணையதளத்தை ஆராய்ந்தபோது, ​​அவர்களின் சர்வரில் நுழைவதற்கான வழியைக் கண்டேன். இதன் மூலம் யாரையும் நாசாவின் சர்வருடன் இணைக்க முடிகிறது. கடவுச்சொல் இல்லாமலே நாசாவில் இருந்து வந்தது போல் மின்னஞ்சல்களை அனுப்ப முடிந்தது" என இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மகஷ்வரகன் கூறுகிறார்.

மகஷ்வரகன் ஹேக் செய்த மின்னஞ்சல் அமைப்பை நாசாவின் பிரிவுகளில் ஒன்று பயன்படுத்துகிறது. ஈமெயில் அமைப்பை ஹேக் செய்தும் அவரே நாசாவின் பாதிப்பு வெளிப்படுத்தல் கொள்கையின் (VDP) கீழ் உள்ள Bugcrowd வசதியின் மூலம் நாசாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

பெர்சனல் லோன் உடனே ஓகே ஆகணுமா? இதெல்லாம் கரெக்டா வச்சுக்கோங்க!

"நாசாவின் சார்பாக, பாதிப்பைக் கண்டறிவதிலும், நாசாவின் VDP கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதிலும் உங்கள் முயற்சிகளை அங்கீகரிக்க விரும்புகிறோம்" என்று நாசா அலுவலகத்தின் மூத்த தகவல் பாதுகாப்பு அதிகாரி மைக் விட் பதில் அளித்துள்ளார். இந்தப் பதில் மகஷ்வரஹனுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி வந்துள்ளது.

"உங்கள் அறிக்கை நாசாவின் அறியப்படாத பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை எளிதாக்கியுள்ளது. நாசாவின் தகவல்களைப் பாதுகாக்க எங்களுக்கு உதவியது. உங்கள் முயற்சிகளுக்கான எங்களின் பாராட்டின் அடையாளமாக இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று விட் குறிப்பிட்டுள்ளார்.

நாசாவின் பாதிப்பு வெளிப்படுத்தல் கொள்கையின் (VDP) கீழ், மகஷ்வரகனின் கண்டுபிடிப்பு உயர்-நடுத்தர பிழை (high-medium bug) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிழையை சரிசெய்து சர்வரைப் பாதுகாக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளிப் பொறியியல் துறை டீன் அசோகன் கூறுகையில், "VDP என்பது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நாசாவின் சவால். இப்படி நாசாவிடமிருந்து அங்கீகாரக் கடிதத்தைப் பெறுவது ஒரு அரிய சாதனை" என்று சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கு முன்பு, ஐ.நா.வின் முக்கிய வணிகத் தரவு மற்றும் தனிப்பட்ட தகவல்களின் தொகுப்பில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்து கூறியதற்காக ஐக்கிய நாடுகள் சபை மகஷ்வரகனைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரிஜினல் கோல்டு எப்படி இருக்கும்? தங்கம் வாங்கும்போது 3 விஷயத்தை நோட் பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios