MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரிஜினல் கோல்டு எப்படி இருக்கும்? தங்கம் வாங்கும்போது 3 விஷயத்தை நோட் பண்ணுங்க!

ஒரிஜினல் கோல்டு எப்படி இருக்கும்? தங்கம் வாங்கும்போது 3 விஷயத்தை நோட் பண்ணுங்க!

தங்கம் வாங்கும்போது அது அசல் தங்கம்தானா என்பதை சரிபார்க்க வேண்டும். அப்போது வாடிக்கையாளர்கள் தூய தங்கத்துக்கான மூன்று அடையாளங்களை கவனிக்கவேண்டும். இந்த அறிகுறிகள் தங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை உறுதி செய்பவை.

2 Min read
Author : SG Balan
| Updated : Oct 06 2024, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
How to identify Pure Gold?

How to identify Pure Gold?

பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் உண்மையான தங்கத்தையும் போலியையும் எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்வது அவசியம். மிக எளிதாகவே தூய தங்கத்தை அடையாளம் காணலாம். அதற்கு கவனிக்கவேண்டிய மூன்று முக்கிய அறிகுறிகள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Tips to check the purity of gold

Tips to check the purity of gold

தங்கத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் ஒரு சான்றிதழ் அமைப்பு ஹால்மார்க்கிங். உங்கள் தங்க நகைகளின் தூய்மை மற்றும் ஹால்மார்க்கிங்கில் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அறிகுறிகளை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று பார்ப்போம். இதன் மூலம் சரியான தங்கத்தை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

37
What is Gold Hallmarking?

What is Gold Hallmarking?

தங்க ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்த்திக்குச் சான்றளிக்கும் அதிகாரபூர்வ அமைப்பாகும். இந்தியாவில், தங்க நகைகளை வாங்குபவர்களுக்குத் தரமான தங்கம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தங்க நகைகளை ஹால்மார்க் சான்றினை வழங்கும் நிறுவனம் இந்திய தரநிலைகளின் பணியகம் (BIS).

47
Purity of Gold Jewellery

Purity of Gold Jewellery

தங்க நகைகளின் தூய்மையை எவ்வாறு சரிபார்க்கலாம்? தங்க நகைகளின் ஹால்மார்க்கிங்கைச் சரிபார்க்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகள் நீங்கள் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையைக் குறிக்கின்றன.

57
BIS Standard Mark

BIS Standard Mark

BIS லோகோ: பார்க்க வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான அடையாளம் BIS லோகோ தான். தங்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது என்பதையும் தூய தங்கத்தின் தன்மை முழுமையாக இருக்கிறது என்பதையும் குறிப்பது இந்த BIS லோகோ. இந்த லோகோ பொதுவாக முக்கோணக் குறியீடாக இருக்கும். அதன் அடியில் "BIS" என்ற எழுத்துகள் இருக்கும். இது தங்கம் சரியான தர சோதனைகள் மூலம் சரிபார்க்கப்பட்டது என்று உறுதி செய்கிறது. இதனால், அதன் தூய்மைத் தன்மையை நம்பலாம்.

67
Purity Grade in Karat

Purity Grade in Karat

எத்தனை காரட்?: காரட் அளவைக் கொண்டு தூய்மையின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். இது தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பதைக் குறிக்கும். உதாரணமாக, 22 காரட் தங்கம் (916) என்றால் 91.6% தூய தங்கத்தைக் குறிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான தங்க நகைகள் இந்தத் தரநிலையிலேயே இருக்கின்றன. 18 காரட் தங்கம் (750) 75% தூய தங்கத்தை குறிக்கிறது. 14K காரட் தங்கம் (585) 58.5% தங்கத்தைக் குறிக்கும்.

இந்த எண்கள் நகைகளில் உள்ள தூய தங்கத்தின் சதவீதத்தை ஒத்திருக்கும். காரட் குறியீடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தங்கம் தூய்மையானது.

77
Jeweller’s Identification Mark

Jeweller’s Identification Mark

நகை வியாபாரிகளின் அடையாளக் குறியீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையம்: நகைக்கடைகளின் அடையாளக் குறியீடு மற்றும் மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் (AHC) லோகோ ஆகியவை இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். BIS சான்று பெற்ற எல்லா நகைக்கடைகளுக்கும் ஒரு தனித்துவமான அடையாளக் குறியீடு இருக்கும். இந்தக் குறியீடு தங்க நகை எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய உதவும். ஹால்மார்க்கிங் மையத்தின் லோகோ, தங்கம் தூய்மை சரிபார்ப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டு குறியீடுகளும் தங்கம் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டதை உறுதி செய்கின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
ரூ.50 லட்சம் காப்பீடு: 18 முதல் 65 வயது வரை; எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்!
Recommended image3
Astrology: ஜோசியம் பார்த்து ரூ.1800 கோடி வருமானம்.! உண்மையில் கோடீஸ்வர யோகம் இதுதான்.! யாருக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved