சென்னையில் அதிர்ச்சி.. குளிர்பானம் அருந்திய இளைஞர்... அடுத்த சில நொடிகளில் நெஞ்சுவலியால் பலி.!
சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் சதீஷ்(25) கிழக்கு கடற்கரை சாலை அக்கறை அருகே நண்பர்களுடன் வெகுநேரமாக இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்த போது சோர்வடைந்திருக்கிறார். அருகில் உள்ள கடையில் நொறுக்கு தீணியுடன் குளிர்பானம் ஒன்றையும் அருந்திய அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.
சென்னையில் விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீரென நெஞ்சுவலி, மூச்சு திணறல் ஏற்பட்டு சதீஷ்(25) என்ற இளைஞர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி குளிர்பானம்
பிரபல குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை அதே போல் போலியாக அச்சிடப்பட்ட பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் அதிகம் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. குடிசைத் தொழில் போல் ஆங்காங்கு இதனை தயாரித்து பெட்டிக்கடைகளிலும், பஸ் ஸ்டாண்ட் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. இதனை கிராமப்புற மக்கள் மற்றும் குழந்தைகள் வாங்கி குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
தொடரும் உயிரிழப்பு
சமீபத்தில் கூட சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மலிவு விலை குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் வாந்தி மற்றும் பேதியால் பாதிக்கப்பட்டனர். மேலும், சென்னை பெசண்ட் நகரில் டொகிடோ என்ற 10 ரூபாய் குளிர்பான அருந்திய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேருந்து நிலைய கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி அருந்திய 6 வயது சிறுவன் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான்.
இளைஞர் திடீர் மரணம்
இந்நிலையில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் சதீஷ்(25) கிழக்கு கடற்கரை சாலை அக்கறை அருகே நண்பர்களுடன் வெகுநேரமாக இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்த போது சோர்வடைந்திருக்கிறார். அருகில் உள்ள கடையில் நொறுக்கு தீணியுடன் குளிர்பானம் ஒன்றையும் அருந்திய அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. பனையூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்ற போது மூச்சு திணறல் அதிகமானதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சோதித்து பார்த்துள்ளார். உடல்நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்பட்டதால் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சதீஷ் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பரிசோதனை செய்தில் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இதுதொடர்பாக கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணத்தை கூற முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.