Asianet News TamilAsianet News Tamil

ஷாக்கிங் நியூஸ்.. கர்நாடகாவில் சென்னை பெண் மருத்துவர் மர்ம மரணம்.. நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகர் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக  சிந்துஜா (28) பணியாற்றி வந்தவர். இவர் சென்னையை சேர்ந்தவர். 

Chennai woman doctor dies mysteriously in Karnataka tvk
Author
First Published Sep 30, 2023, 2:18 PM IST

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் மர்மமான முறையில் கர்நாடகாவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகர் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக  சிந்துஜா (28) பணியாற்றி வந்தவர். இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சிந்துஜா விடுமுறை என்று சொல்லாமல் நேற்று திடீரென மருத்துவமனைக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. 

இதையும் படிங்க;- மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்.. சிக்கிய மெடிக்கல் ஷாப் ஓனர்.!

இதனால், சந்தேகமடைந்த ஊழியர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் கர்நாடகாவில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்.. விஷயம் தெரிந்த மைத்துனர்! இறுதியில் நடந்தது என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios