குடியிருப்பு வளாகத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி செய்த காரியம்.. அலறி ஓடிய மேலாளர்..!

சி.சி.டி.வி. கேமராவை எடுக்கும் விவகாரத்தில் குடியிருப்பு வளாக அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குடும்பத்தார் இடையே பிரச்சினை எழுந்தது. 

 

Chennai Wife of ex-IAS officer set dog upon staffer

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள டைஷா வளாகத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி ஒருவர் மேலாளர் மீது நாயை ஏவி விட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை எடுக்கும் விவகாரத்தில் குடியிருப்பு வளாக அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குடும்பத்தார் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் பிரச்சினை தீராத நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி மேலாளர் மீது நாயை ஏவி விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.சி.டி.வி. கேமரா:

நாயை ஏவி விட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ்.  அதிகாரி மனைவி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பொது வழியை நோக்கி இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் குற்றம்சாட்டி வந்தனர். இதன் காரணமாக பொது வழியை நோக்கி இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை அகற்ற குடியிருப்பு வளாக அதிகாரி மற்றும் பலர் வலியுறுத்தி வந்துள்ளனர். 

எனினும், இதுபற்றி கவலை கொள்ளாமல், சி.சி.டி.வி. கேமராவை எடுக்காமலேயே இருந்துள்ளனர். இதை அடுத்து குடியிருப்பு வளாக மேலாளர் எஸ் ஸ்ரீனிவாசன், 44 சி.சி.டி.வி. கேமராக்களை எடுக்க பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். எனினும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குடும்பத்தார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதை அடுத்து சி.சி.டி.வி. கேமராவை குடியிருப்பு வளாகம் சார்பில் அகற்ற மேலாளர் ஸ்ரீனிவாசன் முடிவு செய்தார்.

காவல் நிலையத்தில் புகார்:

அதன்படி சி.சி.டி.வி. கேமரா அகற்ற ஆட்கள் வரவைக்கப்பட்டு, பணிகளும் துவங்கின. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி தன் வீட்டில் வளர்த்து வந்த நாயை மேலாளர் மீது ஏவி விட்டுள்ளார்.  நாயை கண்டு அதிர்ந்து போன ஸ்ரீனிவாசன் உடனடியாக அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவம் பற்றி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல் துறை அதிகாரிகள் புகாரை ஏற்று ஒப்பஉதல் சீட்டு வழங்கினர். 

குடியிருப்பு வளாகத்தின் நலசங்க தலைவர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. என்.பி. சிங் அசோசியேஷன் சார்பில் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அவரின் மனைவி கருத்து கூற மறுத்து விட்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios